குழந்தைகளுக்கு மாவுசத்து நிறைந்த சிவப்பு அவலில் புதிய ரெசிபி.!  - Seithipunal
Seithipunal


அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன் வகைகளில் தோசையும் ஒன்றாகும். இப்போது வித்தியசமான முறையில் சிவப்பு அவல் தோசையை எவ்வாறு வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
தோசை மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு அவல் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் சிவப்பு அவலை 15 நிமிடம் ஊற வைத்து, தோசை மாவுடன் கலந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.

கடைசியாக தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான சிவப்பு அவல் தோசை தயார்..! 

இதை தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HOW TO PREPARE SIVAPPU AVAL DOSA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->