சுவையான சீப்பு சீடை.! விழாக்கால ஸ்பெஷல்..!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

உளுத்தம் மாவு - அரை கப், 
அரிசி மாவு - அரை கப், 
கடலை மாவு - அரை கப், 
தேங்காய் பால் - அரை கப், 
வெண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

சீப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். 

பிறகு அதில் தேங்காய் பாலை லேசாக சூடேற்றி பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசையவும். பிறகு முறுக்கு அச்சில் தட்டையாக இருக்கும் சீப்பு அச்சில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழியவும்.

பிறகு கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, அதனை உருட்டிக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சீப்பு சீடை ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare seeppu seedai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->