சத்துமாவு தயாரிப்பது எப்படி?.. என்னென்ன நன்மைகள்?.! - Seithipunal
Seithipunal


உடல் பலன் பெறவும், உடல் சோர்வு நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடல் எடை அதிகரிக்கவும், நரம்பு பலன் பெறவும் சுவையான மற்றும் உடலுக்கு நன்மையை செய்ய கூடிய சத்துமாவு செய்முறை குறித்து இன்று காணலாம். 1 வயது முதல் தினமும் எடுத்து கொள்ளும் இயற்கை சத்து மாவு தயாரித்து சாப்பிட்டு நாமும் பலன் பெறலாம்.

தேவையான மூல பொருட்கள்:

கேழ்வரகு – 50 கி,
கம்பு – 50 கி,
சோளம் – 50 கி,
கோதுமை – 50 கி,
புழுங்கல் அரிசி – 50 கி,
பார்லி – 50 கி,
ஜவ்வரிசி – 50 கி,


பச்சை பயறு – 50 கி,
சோயா பீன்ஸ் – 50 கி,
கருப்பு சுண்டல் – 50 கி,
மக்காச்சோளம் – 50 கி,
வறுத்த வேர்க்கடலை – 100 கி,
பொட்டுக்கடலை – 50 கி,
முந்திரி – 50 கி,
பாதாம் – 50 கி,
ஏலக்காய் – 50,
வெள்ளை கொண்டைக்கடலை – 50 கி,
நாட்டு சக்கரை - 500 கி.

செய்முறை:

மேலுள்ள பொருட்களை வாங்கி காய வைத்து, நன்றாக சுத்தம் செய்த பின்னர் அரைத்து காற்று புகாத வகையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சத்து மாவை 200 மிலி அளவுள்ள பாலில் 1 கரண்டி சேர்த்து குடித்து வரலாம். குழந்தைகளுக்கும் வழங்கலாம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், உடல் மெலிந்து காணப்படும் நபர்களுக்கு சத்து மாவு மிகவும் நல்லது.

சத்து மாவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : 

சத்துமாவு பாலில் கலந்து அல்லது சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். இரத்ததை உள்ள அணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் நல்ல பலன் பெரும். உடல் எடை அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனை சரியாகும். தோள்களில் உள்ள சுருக்கம் மறையும். உடல் சோர்வு நீங்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Sathu Maavu Naturally Health Tips


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->