உருளைக்கிழங்கு ராகி மசால் தோசை..! குட்டீஸ் ஸ்பெஷல்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு - 2,
அரிசி மாவு, ராகி மாவு - தலா 100 கிராம்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பெரிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
கரம் மசாலாத்தூள் - - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கடுகு - கால் ஸ்பூன்,

செய்முறை:
 
பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.

ராகி மாவுடன் அரிசி மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து எடுத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவை போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கி பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

இத்துடன் கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து இரண்டாக மடித்து எடுக்கவும்.

சுவையான ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare potato dosa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->