சுவையான பருப்பு வடை செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


விருந்திற்கு எப்பொழுதும் சாதாரண வடைகளை செய்து போரடிக்காமல் அருமையான  மசால் வடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

கடலைப் பருப்பு : 1/2 கிலோ,
கொத்தமல்லி இலை -2
புதினா இலை - 2 
பட்டை துண்டு - 1
கிராம்பு - 2
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 4 
நல்லெண்ணெய் - 1/2 லி,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - 1,
பெரிய வெங்காயம் - 1,
சோம்பு - ஒரு தேக்கரண்டி,
கரம் மசாலா - சிறிதளவு, 
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு 
பச்சை மிளகாய் - 4 
பூண்டு - 8 பல்

vadai, seithipunal

செய்முறை: 

கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வழக்கம் போல வெஜ் பிரியாணி ஒன்றை மசாலா மற்றும் உப்பு சேர்க்காமல் செய்து எடுத்து தனியாக ஆரவைத்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவு பாதியாக அரைத்தவுடன் சேர்த்து அரைக்கவும்.

பின்னர், அந்த மாவுடன் சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை , கரம் மசாலா, மஞ்சள் தூள், ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அத்துடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள பிரியாணியையும் கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பின்னர் கடலைப்பருப்பு மிக்சை எடுத்து சிறிது சிறிதாக எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
சுவையான பிரியாணி வடை ரெடி!!

English Summary

how to prepare paruppu vadai


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal