குழந்தைகளுக்கு பிடித்த ஆரஞ்சு பிரியாணியை இல்லத்தில் செய்து அசத்துவது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


நமது குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான சாதங்களை செய்து வழங்கினால் அவர்களுக்கு உணவின் மீது நல்ல பிரியமானது ஏற்பட்டு., சத்தான உணவுகளை சமைத்து வழங்கினாலும் தாராளமாக சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழம் - 5 எண்ணம் (Nos).,
பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்.,
வெங்காயம் - 3 எண்ணம்.,
புதினா இலை - 1 கைப்பிடி.,
கேரட் - 1 அல்லது 2.,
சில்லி பவுடர் - 2 தே.கரண்டி.,
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி.,
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி.,
கொத்தமல்லித் தழை - 1 தே.கரண்டி.,
எண்ணெய் - 1 தே.கரண்டி.,
உப்பு - தேவைக்கேற்ப.,

orange briyani,

செய்முறை :

வெங்காயத்தை நீளமாக நறுக்கி., கேரட்டை துருவிய பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து., ஆரஞ்சு பழங்களைப் நன்றாக பிழிந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். 

குக்கரில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி., மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி., அதன் பின் ஆரஞ்சு ஜுஸை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. 

சாறு நன்றாக கொதித்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு உப்பு சரி பார்த்து மூடி., அரிசி முக்கால் பதம் வெந்த பின்னர் குக்கரை திறந்து கிளறி விட்டு., துருவிய கேரட் சேர்த்து பின்னர் குக்கரை மூடி 10 நிமிடங்கள் தம்மில் வைக்கவும்.. சுவையான ஆரஞ்சு பிரியாணி தயார்... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare orange biriyani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->