உடல் எடையை குறைக்கும், மசாலா நெல்லிக்காய் ஜூஸ்.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

பச்சை மிளகாய் - 1 
நெல்லிக்காய் - 10
இஞ்சி - 1 இன்ச்
உப்பு - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது 
தேன் - தேவையான அளவு
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு.

nellikai juice,seithipunal

செய்முறை : 

இஞ்சியை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பச்சை மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 

நெல்லிக்காயில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டுசிறிது சிறிது துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

பின்னர் நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரைத் தெளித்து மற்ற அனைத்து பொருட்களையும் அத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.  

பின்னர் அத்துடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து பரிமாறினால், சுவையான மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ் தயார்.!!

குறிப்பு: இதனை காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare nellikai juice


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->