உடலுக்கு வலு சேர்க்கும்.,சுவையான மட்டன் கஞ்சி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ 
அரிசி - 2 கப் 
வறுத்த சிறு பருப்பு - 1 கப் 
கேரட் - 4 
பெ.வெங்காயம் - 3  
பட்டாணி - சிறிதளவு 
உருளைக்கிழங்கு - 2 
மசாலா தூள் - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிதளவு 
 தக்காளி - 4 
மிளகாய் தூள் - தேவையான அளவு 
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பட்டை, ஏலக்காய் - சிறிதளவு.

mutton kanji, seithipunal

செய்முறை: 

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கேரட், தக்காளியை ஆகியவற்றை நன்றாக பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அதன்பின்னர் மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதனையும் பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 

அரிசியை கழுவி சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். 

பின்னர் குக்கரை எடுத்து அதில் இறைச்சியை போட்டு அத்துடன் மிளகாய்தூள், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட் ஆகியவற்றை சேர்த்து போதுமான அளவு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். 

நன்கு வெந்த பின்னர் குக்கரை திறந்து அரிசி மற்றும் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்துவைத்திற்கும் கலவையில் சேர்த்து கலக்கவும், அதை அடுப்பில் வைத்து தேங்காய் பாலை அத்துடன் சேர்த்து ஒரு கொதி  வந்ததும் இறக்கினால், சுவையான சத்தான மட்டன் கஞ்சி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare mutton kanji in tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->