சுவையான மற்றும் சத்தான முட்டைகோஸ் குழம்பு செய்யும் முறை எப்படி?..!! - Seithipunal
Seithipunal


உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, முட்டைக்கோஸ் ஒரு பயனுள்ள நல்ல உணவாக இருக்கும். முட்டைக்கோஸில் இருக்கும் அதிகளவு சத்துக்கள் காரணமாக உடலுக்கு நன்மை கிடைக்கிறது. இப்பொழுது முட்டைக்கோஸ் குழம்பு எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள்:

நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கிண்ணம்.,
பெரிய வெங்காயம் - 2 எண்ணம் (Nos).,
தக்காளி - 2 எண்ணம் (Nos)., 
பட்டை - 2 எண்ணம் (Nos).,

கிராம்பு - 3 எண்ணம் (Nos)., 
ஏலக்காய் - 4 எண்ணம் (Nos).,
சோம்பு - 1 சிறிய கரண்டி.,
மிளகாய்த்தூள் - 2 சிறிய கரண்டி.,

தனியாத்தூள் - 1 சிறிய கரண்டி.,
மஞ்சள் தூள் - அரை சிறிய கரண்டி.,
தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம்.,
முந்திரி பருப்பு - 5 எண்ணம்.,

எண்ணெய் - தே.அளவு.,
உப்பு - தே.அளவு.

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு., இதனுடன் 4 கப் தண்ணீர்., தே.அளவு உப்பு., மிளகாய்த்தூள்., தனியாத்தூள் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இதனையடுத்து தேங்காய்த்துருவல்., சோம்பு., முந்திரி பருப்பு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து., சிறிது தண்ணீர் விட்டு அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

பிறகு ஒரு வானெலியில் எண்ணெய்யை ஊற்றி சுடானதும் பட்டை., கிராம்பு., ஏலக்காய் போட்டு நன்றாக தாளித்து., கொதிக்க வைத்துள்ள குழம்பில் சேர்த்து கலக்கினால் முட்டைக்கோஸ் குழம்பு தயார்...

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare muttaikos kulampu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->