மாதவிடாய் கோளாறுகளை நீக்கும், முருங்கை கீரை சூப்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

முருங்கை கீரை - 1 கப்
வெங்காயம் - 2
எண்ணெய்  - 1 தேக்கரண்டி
பூண்டு - 7
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 1
உப்பு, மிளகு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :

முருங்கை கீரையை சுத்தமாக கிள்ளி எடுத்து கழுவி கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை நசுக்கி எடுத்து கொள்ளவும். இஞ்சியை துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்த பின்னர் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி உள்ளிட்டவை போட்டு தாளித்து கொள்ளவும், 

பின் வெங்காயத்தை போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும். முருங்கை இலையை அத்துடன் சேர்த்து, வதக்கி தேவையான தண்ணீரை அத்துடன் சேர்த்து கிளறி வேகவைத்து உப்பு, மிளகு தூள் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு குடிக்கவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare murngaikeerai soup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->