உடலுக்கு சத்துக்களை வழங்கும் மரவள்ளிக்கிழங்கு பணியாரம்.!! - Seithipunal
Seithipunal


மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரம் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இன்று மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு துருவல் - 2 கப்

தேங்காய் துருவல் - கால் கப்

தோசை மாவு - 1 கப்

பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை:

முதலில் தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும்.

அதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி இறக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை குழிகளில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare Maravalli Paniyaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->