சுவையான கத்தரிக்காய் பஜ்ஜி!! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்: 

கடலை மாவு - 1 கப், 
அரிசி மாவு - 2 டீஸ்பூன், 
பெரிய கத்தரிக்காய் - 1, 
மைதா மாவு - 1 டீஸ்பூன், 
ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - சுவைக்கேற்ப, 
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.
பூண்டு - 3 பல், 
இஞ்சி - 1 துண்டு, 
சோம்பு - 1 டீஸ்பூன், 

katharikka,bajji

செய்முறை: 

கத்தரிக்காயை நான்றாகக் கழுவித் துடைத்து பின்னர் பஜ்ஜிக்கு மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். 

பூண்டு, மிளகாய்தூள், இஞ்சி, சோம்பு ஆகிய அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, பாதியை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள கலவையில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். 

பின்னர், ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் இந்த அரைத்த விழுதை சிறிது தடவவும். . 

மீதமுள்ள அரைத்த விழுது, கடலை மாவுடன் சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவை சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்து எடுத்து கொள்ளவும். 

பின்னர், கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி உடனே எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெதூக்கவும். 

சூடான சுவையான கத்தரிக்காய் பஜ்ஜி தயார்.

English Summary

how to prepare katharikkai bajji


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து




கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து




Seithipunal