குட்டீஸ்களுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

வெல்லம் - 2 கப்
கம்பு மாவு - 2 கப்
ஏலக்காய் - 10
பாதாம் - 10
முந்திரி - 10
பிஸ்தா - 10
எண்ணெய் - தேவையான அளவு
திராட்சை - 10
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை :

கம்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுக்கவும்.

அந்த மாவை கொழுக்கட்டை வடிவில் பிடித்து கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆறவைத்து மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kampu mavu laddu 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->