சுவையான இறால் பெப்பர் பிரை.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 4
இறால் - 250 கிராம் 
பூண்டு - 25 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 25 கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய்  - தேவையான அளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு.

iral pepper fry, seithipunal

செய்முறை :

இறாலை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். 

வெங்காயத்தை நன்கு  பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவி எடுத்துள்ள இறாலைப்போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சுமார் 1 மணி நேரம் போட்டு நன்றாக ஊறவைத்து கொள்ள வேண்டும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். 

இஞ்சி கலவையை வெங்காயம் வதங்கியதும் அதில் சேர்த்து, நன்கு வாசனை வரும் வரை நன்றாக வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். இறாலை எடுத்து தேவையான அளவு உப்பை சேர்த்து பிரட்டி விடவும். 

இறாலை அதில நேரம் வேகவிடாமல் லேசாலை வெந்தவுடன் இறக்கி பிரட்டி விடவும். சுவையான இறால் பெப்பர் பிரை தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare iral pepper fry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->