முட்டை-மக்காச்சோளம் சேர்த்து சுவையான சூப் செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

மக்காச்சோளம்  - 1 பெரியது
வெங்காயம் - 1
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
பால் - 1 கப்
ப.மிளகாய் - 2
பட்டர் - 1 ஸ்பூன்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
உப்பு, மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1/4 லிட்டர்
வெங்காயத்தாள் - சிறிதளவு,
முட்டை - 2.

செய்முறை :

ப.மிளகாய், வெங்காயம் மற்றும் வெங்காயத்தாளை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

சோளத்தை வேக வைத்து ஆறிய பின்னர் உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

மேலே நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, சூடாகப் பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare egg cabbage soup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->