பச்சை மிளகாயில், சுவையான அல்வா செய்வது எப்படி?.! - Seithipunal
Seithipunal


நாம் பொதுவாக பச்சை மிளகாயில் ஊறுகாய், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், மிளகாயில் அல்வா செய்து சாப்பிட்டு இருக்கமாட்டோம். மிளகாயில் அல்வா செய்வது எப்படி என இனி காணலாம். 

பச்சைமிளகாய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் - 1 கிண்ணம்,
சர்க்கரை - கால் கிண்ணம்,
முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை - தேவையான அளவு,
சோள மாவு - 1 சிறிய கரண்டி,
நெய் - 3 சிறிய கரண்டி,

பச்சைமிளகாய் அல்வா செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட பாதாம், முந்திரி, திராட்சியை நெய்யில் நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயில் விதைகளை நீக்கி எடுத்துவிட்டு, பாத்திரத்தில் நீர் சேர்த்து பச்சை மிளகாயை இட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 

இதன்பின்னர், பச்சை மிளகாயை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயின் வாசனை போகும் வரை வதக்கியதும், சர்க்கரையை சேர்த்து வதக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து சிறிதளவு சோள மாவினை நீரில் கரைத்து, அடுப்பில் உள்ள மிளகாய் மற்றும் சர்க்கரை கரைசலில் ஊற்றி கிளற வேண்டும். பின்னர் அல்வாவிற்கு ஏற்ற பதம் வந்ததும், அதனுடன் முந்திரி, பாதம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் அல்வா தயார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Chilly Halwa Tips Tamil


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->