சுண்டி இழுக்கும், சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மட்டன் - 1 /2 கிலோ
உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - 2 கொத்துகள்
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்.


கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பெரியது)
சின்ன வெங்காயம் - 50 கிராம்.

chettinad masala,seithipunal

செட்டிநாடு மசாலா செய்ய தேவையான பொருட்கள்: 


காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கேற்ப)
கல் பாசி - 2
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்துகள்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்

mutton, seithipunal
செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, தனியா தூள், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துகொள்ளவும்.

பின்னர் நல்லெணெயில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை  லேசாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து எடுத்து கொள்ளவும். கிரேவிக்காண பொருட்களையும் அதைப்போல நல்லெண்ணியில் வதக்கி, பின்னர், ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.  

ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர், கடுகு போட்டு தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். அதன் பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கிரேவியை எடுத்து அத்துடன் சேர்க்க வேண்டும்.

2 நிமிடம் கொதிக்க விட்டு, மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி, அதில் செட்டிநாடு மசாலாக்களை தூவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி, பின்னர் நன்றாக கிளறி தண்ணீர் சுண்டி மசாலா கிரேவி மட்டனில் நன்கு வெந்த பின்னர் இறங்கினால் சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி ரெடி.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare chettinad mutton gravy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->