எனெர்ஜி தரும் அத்திக்காய் பருப்பு கூட்டு.! செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


அத்திக்காய் பருப்பு கூட்டு சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1/4 கப்
அத்திக்காய் - 1 கப்
முழு பூண்டு - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 2
உப்பு எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அத்திக்காயை நன்றாக இடித்து விதைகளை நீக்கி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடி,பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை ஊற்றி காயவைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் தக்காளியை இதில் சேர்த்து வதக்கவும்.

பின்னர், அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி பின்பு, பயத்தம்பருப்பு, அத்திக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை நன்றாக வேக விட்டு இறக்கி கொள்ளவும். 

விசில் அடங்கிய பின்னர், திறந்து பரிமாறவும். சுவையான அத்திக்காய் பருப்பு கூட்டு ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare athikkai koottu 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->