சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருள்கள் :

பச்சை மிளகாய் - 3
கம்பு மாவு - 1 கப்
முட்டை கோஸ் - 100 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை துருவி எடுத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நன்கு பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவி எடுத்த கரம்மசாலா தூள், காய்கறிகள்,  பால் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவை போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். 

பின்னர் அந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து தனியே எடுத்து வைக்கவும். கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தேய்த்து சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.!

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare andra special kampu chappathi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->