சாஃப்டான வெண்ணிலா கேக் குக்கர்ல செய்யலாமா? - Seithipunal
Seithipunal


மைக்ரோ ஓவன் இல்லையா? குக்கர்லேயே அசத்தலான கேக் செய்யலாம், எப்படின்னு பார்க்கலாம் வாங்க:

தேவையான பொருட்கள்: 
மைதா மாவு- 100 கிராம்
பொடித்த சர்க்கரை- 100 கிராம்
முட்டை- 2
பட்டர் - 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ்- 1/2 டீ ஸ்பூன் 
பேக்கிங் பவுடர்- 1 டீ ஸ்பூன் 
பேக்கிங் சோடா- 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:
குக்கருக்குள், அடிப்பாகம் முழுதும் மூடும் அளவுக்கு உப்பை கொட்டிக்கொள்ள வேண்டும். அதன் மேல் சற்று உயரமாக இருக்குமாறு ஸ்டாண்ட் வைத்து கேஸ்கட் போடாமல் குக்கரை மூடி  25 நிமிடங்கள் குறைந்த தீயில் குக்கரை சூடாக்க வேண்டும்.
விசில் போட கூடாது.

குக்கர் சூடாகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வெள்ளைக் கருவை நன்றாக நுரை பொங்கும் அளவுக்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு மஞ்சள் கருவை வெளிர் மஞ்சள் நிறம் வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில் உருக்கிய பட்டர், பொடித்த சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து  மெதுவாக  கிளறி விடவும். அதன் பின் நுரைப் பொங்க அடித்த வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கிளறவும். பின்பு மைதா மாவை சளித்து சேர்த்தப்பின் அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கவனமாகவும் பொறுமையாகவும் கிளற வேண்டும்.

ஒரு கேக் பேன் ( வட்டமான சற்று அடி கனமான பாத்திரமாக இருந்தாலும் நலம்) எடுத்து உள்ளுக்குள் சுற்றி  வெண்ணெய்யை தடவி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அதில் இந்த கேக் கலவையை ஊற்றி நன்றாக பரப்பி விட வேண்டும்.

25 நிமிடங்கள் குக்கர் சூடாகியதும், அந்த ஸ்டாண்டில் மீது இந்த கேக் பேனை வைத்து கேஸ்கட் மற்றும் விசில் போடாமல் 35 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
 
35 நிமிடங்களுக்கு பிறகு கேக் வெந்து விட்டது என்று தெரிந்தப் பின் சற்று ஆறவிட்டு தட்டில் கவுற்றினால் நல்ல சாஃப்டான சுவையான வெண்ணிலா கேக் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make vannila cake in pressure cooker receipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->