ஆரோக்கியமான சுவைமிகுந்த ரவா தேங்காய் பால் பாயாசம்.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமான சுவைமிகுந்த ரவா தேங்காய்ப் பால் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

பால் - 3 கப்

தேங்காய்ப் பால் - 1 கப்

ரவை - 1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் முந்திரி - 6

நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள நெய்யில் ரவையை கொட்டி வறுத்துக் கொள்ளவும். பிறகு பாலை நன்றாகக் காய்ச்சி, வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு ரவை வெந்ததும், சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறி, பாயாசம் பாதத்திற்கு வந்ததும் முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்தால் சுவையான ரவா தேங்காய் பால் பாயாசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty rava milk payasam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->