ஆரோக்கியமுள்ள சுவையான மணத்தக்காளி கீரை சூப்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமுள்ள சுவையான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - அரை கட்டு

சின்ன வெங்காயம் - 8

பூண்டு - 3 பல்

தேங்காய்ப்பால் - 1 கப்

மிளகுத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி தழை

உப்பு

செய்முறை:

முதலில் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, கீரையையும் சேர்த்து 2 நிமிடம் வழக்கவும்.

பிறகு 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். பிறகு ஒரு நிமிடம் கழித்து குக்கரை திறந்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பால் சேர்த்தால் ஆரோக்கியம் உள்ள வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Manathakkali keerai soup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->