உடலுக்கு சத்து தரும் கம்பு, கேழ்வரகு, தினை கொழுக்கட்டை..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கிண்ணம்,
தினை - ஒரு கிண்ணம்,
கேழ்வரகு - ஒரு கிண்ணம்,
ஏலக்காய் - 4 எண்ணம்,
கருப்பட்டி - 2 கிண்ணம்,
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்,

செய்முறை:

கேழ்வரகு, கம்பு, தினை ஆகிய பொருட்களை தனித்தனியாக எடுத்து, வானலியில் நன்கு வறுத்த பின்னர் ஆறவைத்து ஏலக்காயை சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கருப்பட்டியை துருவி மிக்சியில் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.. பின்னர் தேங்காய் துருவலை தனியாக வதக்கி, பாத்திரத்தில் தானிய கலவையை சேர்த்து, கருப்பட்டி, தேங்காய் துருவல் தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் கைகளில் வைத்து பிசைந்து கொழுக்கட்டை பிடித்து வேக வைக்கவும். 

சுமார் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை பொறுமையாக இருக்க, சுவையான இனிப்பு கொழுக்கட்டை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make kelvaragu kolukattai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->