ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு அட்டகாசமான சீஸ் வெஜ் கட்லெட் செய்து சாப்பிடலாமா.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள் - 200 கிராம்

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு- 2

எண்ணெய் - 3 தேக்கரண்டி

சோம்பு - 1/2 டீ ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2 

தக்காளி - 2

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி 

சீஸ் ஸ்லைஸ் - 2 ஸ்லைஸ்

கான்ஃப்ளவர் மாவு - 2 தேக்கரண்டி

முட்டை - 2

ரொட்டி தூள் - 4 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாகியதும் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொறிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கிய பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்றாக மசிந்து வதங்கிய பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 

பின்பு வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்தபின் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக ஒன்றாக வருமாறு கிளறி விடவும்.

கிளறி வைத்த மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதில் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிய சீஸ் ஸ்லைஸ்களை உள்ளுக்குள் வைத்து கட்லெட் வடிவில் வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளவும்

பிறகு ஒரு கோப்பையில் 2 முட்டையை உடைத்து  நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் கான்ப்ளவர் மாவை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு ப்ளேட்டில் ரொட்டித் தூளை நன்றாக பரப்பி வைத்துக் கொள்ளவும்.

கட்லெட்களை கான்ப்ளவர் மாவில் முக்கி முட்டையில் முக்கி ரொட்டித்தூளில் நன்றாக பிரட்டி எடுத்து மிதமான தீயில் எண்ணையில் பொறித்தெடுக்கவும்.

அந்த கட்லெட்டை பிரிக்கும் பொழுது உள்ளே உருகிருக்கும் சீஸுடன் அந்த மசாலாவின் சுவை மிகவும் சுவையானதாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make cheese veg cutlet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->