சுவையான பிரெட் கார பணியாரம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான பிரெட் கார பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வெங்காயம் -2

கேரட் - 2

சால்ட் பிரெட் துண்டுகள் - 6

இஞ்சி பேஸ்ட் -1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

 தயிர் - 1 கப்

கடுகு - 1/2 டீஸ்பூன் 

எண்ணெய் 

உப்பு 

செய்முறை:

முதலில் வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். பிறகு இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும்.

பின்பு கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான பிரட் கார பணியாரம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Bread kara paniyaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->