குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் கிரில் சான்விட்ச் வீட்டிலேயே செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


வீட்டில் உள்ள குழந்தைகள் கடைகளில் இருக்கும் ஆடம்பர உணவுகளை போல பல உணவுகளை விரும்புவது இயல்பான ஒன்றுதான். சில நேரம் கடைகளில் இருக்கும் உணவுகளை கட்டாயம் வாங்கி தர கூறி அட்டகாசம் செய்வதும் உண்டு.. 

இவ்வாறாக பல பிரச்சனைகள் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இயன்ற சமயத்திலோ இல்லங்களில் செல்லங்களுக்கு பிடித்த உணவுகளை செய்து தரலாம். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது பன்னீர் கிரில் சான்விட்ச்... 

பன்னீர் கிரில் சான்விட்ச் செய்ய தேவையான பொருட்கள்: 

கோதுமை ரொட்டி (அல்லது) நவதானிய ரொட்டி – 8 நறுக்கியது.,
பன்னீர் துருவியது – 1 குவளை,
கேரட் துருவியது – 2 தே.கரண்டி.,
சீஸ் துருவியது – 2 தே.கரண்டி.,
ஸ்வீட் கார்ன் (வேக வைத்தது) – 2 தே.கரண்டி,
வெண்ணெய் – 2 தே.கரண்டி.,
குடைமிளகாய் – 2 தே.கரண்டி (பொடியாக நறுக்கியது).,
மிளகு பொடி – 2 தே.கரண்டி.,
உப்பு – தே.அளவு.,
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது).,
க்ரீன் சட்னி – 2 தே.கரண்டி.

பன்னீர் கிரில் சான்விட்ச் செய்முறை: 

முதலில் பாத்திரத்தை அடுத்து கொண்டு அதில் துருவிய பன்னீர்., கேரட்., சீஸ் மற்றும் வேகவைத்த ஸ்வீட் கார்ன்., நறுக்கிய கொத்தமமல்லி தழை., குடைமிளகாய்., மிளகுத்தூள்., உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். 

பின்னர் கோதுமை ரொட்டியில் முதலில் வெண்ணையை தடவி பின்னர் புதினா சட்னியை தடவி., அதன் மீது பன்னீர் கலவையை வைத்து ரொட்டியால் மூட வேண்டும். பின்னர் சூடாக்கிய கிரில் பேன் அல்லது தோசைக்கல்லில் ரொட்டியினை வைத்து இருபுறம் சிவக்க வேகவைத்து இரண்டாக வெட்டி சூடாக பரிமாறவும். 

கிரீன் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: 

புதினா – 1 கிண்ணம்.,
மல்லித்தழை – 2 தே.கரண்டி.,
தேங்காய் -1 தே.கரண்டி.,
பச்சைமிளகாய் – 4 எண்ணம் (Nos),,
பூண்டு – 4 எண்ணம்.,
இஞ்சி – கால் துண்டு.,
எலுமிச்சைச்சாறு – 1 தே.கரண்டி.,
உப்பு – தேவையான அளவு.,
சீரகம் – 1 தே.கரண்டி..

செய்முறை: 

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னியானது தயாராகிவிடும். இந்த சட்னி வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தாது. செய்யவும் மிகவும் எளிமையானது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make banner grill sandwich


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->