யோனி பகுதியின் அரிப்பு.. எரிச்சல் பிரச்சனை.. எளிய முறையில் சரி செய்யும் வழிமுறைகள்.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அவ்வப்போது யோனி பகுதியில் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல் மற்றும் வலி போன்ற பிரச்சனையானது ஏற்படும். இப்போதுள்ள நிலையில் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு பணிகளை மேற்கொண்டு வருவதால், யோனி பகுதி சருமத்தோடு உராய்வில் ஈடுபடுவதால் அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. 

மேலும், யோனியில் அரிப்பு ஏற்பட பல காரணங்களும் உள்ளது. இறுக்கமான உள்ளாடைகளை அணிந்திருந்தல், நாப்கின்களின் உபயோகம், அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் உடலின் எடை, தாம்பத்தியத்தின் போது உராய்வு ஏற்படுதல், சுய இன்பம் மற்றும் சுய இன்பம் காணும் போது ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளும் உள்ளது. 

periods, periods pain, menopause, menstruation, itching, periods itching, yoni, yoni itching, யோனி, யோனி அரிப்பு, மாதவிடாய், மாதவிடாய் வலி,

இதுமட்டுமல்லாது கெமிக்கல்கள் நிறைந்துள்ள வெஜினல் காஸ்மாட்டிக் பொருட்களை உபயோகம் செய்வதால், இவ்வாறான பொருட்களில் இருக்கும் ஆல்கஹாலின் காரணமாக ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி, பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கும் போது ஏற்படும் (லேசர் முறை மற்றும் வேக்சிங்) பிரச்சனைகள் போன்றவை உள்ளது. 

இதனால் சருமம் சிவந்த நிறத்துடன் காணப்பட்டு, எந்த நேரமும் அரிப்பு மற்றும் பாதிக்கப்படும் யோனி பகுதியில் அரிப்பு, வலி, சரும எரிச்சல், சரும பிளவு மற்றும் தோலின் நிறம் சிவப்பாதல், தோல் உரிவது, தொடும் போது ஏற்படும் வலி மற்றும் அரிப்பு, எரிச்சல் போன்றவையும் ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாக்குகிறது.

periods, periods pain, menopause, menstruation, itching, periods itching, yoni, yoni itching, யோனி, யோனி அரிப்பு, மாதவிடாய், மாதவிடாய் வலி,

இதனை தவிர்ப்பதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து பாதிக்கப்பட்ட யோனியின் வெளிப்புற சருமம் மற்றும் அந்தரங்க பகுதியில் தேய்த்து வந்தால் யோனி பகுதியில் ஏற்பட்ட அரிப்பு பிரச்சனையில் இருந்து நீக்கம் கிடைக்கும். 

ஒரு தே.கரண்டி பட்டர் மற்றும் அரை தே.கரண்டி மஞ்சள் பொடியை சேர்ந்து நன்றாக பேஸ்ட்டாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் நீரினால் சுத்தம் செய்யலாம். ஒரு கையளவு வேப்பிலையை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக மாற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, சுமார் அரை மணிநேரம் கழித்த பின்னர் சுத்தம் செய்யலாம். 

periods, periods pain, menopause, menstruation, itching, periods itching, yoni, yoni itching, யோனி, யோனி அரிப்பு, மாதவிடாய், மாதவிடாய் வலி,

கற்றாழையின் ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து பின்னர் உலர்ந்தவுடன் கழுவி வந்தால் அரிப்பு பிரச்சனையில் இருந்து விலக்கம் அடையாளம். மேலும், இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிட்டு, இயன்றளவு காற்றோட்டமான ஆடைகளை அணிவது நல்லது. குளித்து முடித்த பின்னர் பிறப்புறுப்பு பகுதியை நன்றாக உணர்த்துவது, ஈரமான துணிகளை அணியாமல் இருத்தல் போன்றவற்றில் கவனம் தேவை.. பிறப்புறுப்பில் முடிகளை நீக்கும் போது கவனமாக நீக்கம் செய்ய வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to cure or avoid Yoni Itching


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->