சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய எளிமையான வழிமுறைகள்..! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் சுழற்சியில் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணிற்கும் முக்கியமான விஷயம் ஆகும். இயல்பாக 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இருந்தால் பிரச்சனை இல்லை. இது இயல்பான மாதவிடாயாக கருதப்படும். 

இப்போதுள்ள காலத்தில் பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாயில் ஏற்படும் வயிற்று வலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை உள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கட்டாயம் சரிசெய்யப்படவேண்டிய விஷயமாகும். 

சரியான விகிதத்தில் உள்ள சத்தான உணவுகளை சாப்பிடுதல், சரியான அளவு நீரை அருந்துதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். மேலும், பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மாதவிடாய் சுழற்சி தடைபடுகிறது. கடுமையான மன அழுத்தம் இருந்தால், அது கட்டாயம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

உடலில் ஏற்படும் மன அழுத்த பிரச்சனையால் மாதவிடாய் தொடர்பான ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, மாதவிடாய் தள்ளிபோகுதல் அல்லது முன்னதாகவே ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

மன அழுத்தத்தை குறைக்க முதலில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். இதனை செய்தலே மனதிற்குள் திருப்தி ஏற்படும். தோட்டக்கலை, தையல் மற்றும் இசை போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல் நல்லது. மாலை நேரங்களில் தியானம், பிரார்த்தனை போன்றவையும் மன அமைதியை ஏற்படுத்தும். 

அன்னாசிப்பழம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால், அன்னாசிப்பழம் அதிகளவு சாப்பிட கூடாது. அன்னாசிப்பழத்தை போல பப்பாளியும் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இவைகளில் உள்ள கரோட்டின், ஈஸ்டிரோஜன் போன்றவை ஹார்மோனை தூண்டும் வல்லமை கொண்டது. இதனால் மாதவிடாய் குறைபாடுகள் அகலும். மாதவிடாய் காலங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் பப்பாளியில் இருந்தாலும், அளவு என்பது மிக முக்கியம். 

ஒரு டம்பர் நீரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஓம விதைகளை ஊறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் தாமதம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். ஓம விதை கருப்பையை சுற்றி அமைந்துள்ள உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். ஓம விதையுடன் இஞ்சி, தேநீர், தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் விரைவில் ஏற்படும்.

எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து இடித்து உருண்டை செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தாமத பிரச்சனை சரியாகும். மேற்கூறியுள்ள தகவல்கள் மாதவிடாய் பிரச்சனைக்கான பொதுவான தீர்வுகள் மட்டுமே. மருத்துவரை அணுகுவது அல்லது உரிய மருத்துவரின் ஆலோசனை பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்வதே நல்லது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Cure irregular Menstruation Woman Health Tips 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->