திராட்சையை வைத்து முகத்தை ஜொலிக்க வைப்பது எப்படி?.. பியூட்டி டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


நாம் சாப்பிடும் திராட்சைகளில் பச்சை திராட்சை மற்றும் கருப்பு திராட்சை என இரண்டிலுமே நீர்சத்து அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு அழகூட்டும். பச்சை திராட்சையை வைத்து சருமத்தை அழகேற்ற, நான்கு திராட்சையை கசக்கி சாறாக எடுத்து முகத்தில் தடவலாம். பின்னர் 10 நிமிடங்கள் கழித்தும், குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மிருதுவாக மாறும்.

எண்ணெய் பசை தன்மையுடைய சருமத்திற்கு, அரை கரண்டி திராட்சை சாறுடன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து தடவி மசாஜ் செய்யலாம். இதனால் தோலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி முகம் பொலிவுபெறும்.

பருத்தொல்லையை குறைக்க பச்சை திராட்சையுடன், இரண்டு புதினா இலைகளின் சாறை சேர்த்து, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் தேய்க்க பருக்கள் பிரச்சனை சரியாகும். சருமம் அழகாகும். தொய்வடைந்த தோலை பொலிவுடன் மாற்றுவதற்கு பச்சை திராட்சை சாறுடன், முட்டை வெள்ளைக்கருவை எடுத்து கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து, முகம் மற்றும் கை, கால்களில் தேய்த்து 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் முதுமை தோற்றம் மறைந்து இளமை அதிகரிக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Beauty face using Grape Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->