உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் செம்பருத்தி பூ சாறு செய்வது எப்படி?.! - Seithipunal
Seithipunal


சில பூக்களை பார்த்தாலே நமது மனம் அமைதியாகிவிடும். அந்த வகையில், கண்களுக்கு குளிர்ச்சியாக பார்வைக்கு அழகுதரும் செம்பருத்தி பூவை பலரும் வெறும் வாயில் சாப்பிட்டு இருப்போம். செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. செம்பருத்தி பூவின் இலை, மொட்டு, வேர் போன்று செம்பருத்தி பூ மற்றும் செடியின் அனைத்து பாகமும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. 

செம்பருத்தி பூ சாறு செய்யத் தேவையான பொருட்கள்: 

செம்பருத்தி பூ - 10 பூக்கள்,
தண்ணீர் - 3 கிண்ணம்,
எலுமிச்சை பழம் - 1 எண்ணம் (No),
தேன் - தேவையான அளவு.

செம்பருத்தி பூ சாறு செய்முறை:

முதலில் பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் செம்பருத்திப்பூவை போட்டு கொதிக்க வைத்து, மூடி வைத்து மூடிவிட வேண்டும். நன்கு நீர் கொதித்துவிட்டது என்று தெரிந்ததும் அடுப்பை அனைத்துக்கொள்ளலாம். 

பின்னர் செம்பருத்தி பூ கொதித்த நீர் ஆறியதும், அதனைவடிகட்டி எலுமிச்சை பழசாறு சேர்த்து கலக்க வேண்டும். இதனை சேர்த்ததும் செம்பருத்தி பூ சாறு கலவை ஆரஞ்சு நிறத்தில் மாறும். பின்னர் தேவையான அளவு தேனை சேர்த்து குடிக்கலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து குளுகுளுவென்றும் குடிக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hibiscus Flower or Semparuthi Poo Juice Making Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->