உடலுக்கு ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


உடலுக்கு ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய் - 4

துருவிய தேங்காய் - 1/4 கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 

உப்பு 

செய்முறை:

முதலில் வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

பிறகு அதனை ஆற வைத்து அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள். பின்பு மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பு, தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின்பு கடைசியாக வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையில் சேர்த்தால் ஆரோக்கியமான வாழைப்பூ துவையல் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Vazhaipoo thuvaiyal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->