ஆரோக்கியமுள்ள சுவையான பீர்க்கங்காய் ரைஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமுள்ள சுவையான பீர்க்கங்காய் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

சாதம் - 1 கப்

நறுக்கிய பீர்க்கங்காய் - 2 கப்

வெங்காயம் -1

தக்காளி -1 

இஞ்சி

கொத்தமல்லி

பூண்டு

பச்சை மிளகாய்

சீரகம்

வறுத்த முந்திரி

நெய்

எண்ணெய் 

கரம் மசாலாத்தூள்

மஞ்சள்தூள்

உப்பு 

செய்முறை:

முதலில் இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்பு எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாக்கி, சீரகம் தாளித்து, இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறி, தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

பிறகு நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு, உதிராக வடித்த சாதமும் சேர்த்து நன்கு கிளறி வறுத்த முந்திரியை சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமுள்ள பீர்க்கங்காய் ரைஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy tasty Ridgegourd rice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->