வீட்டிலேயே எப்படி ஹேர் கலரிங் செய்வது?! செலவில்லா சிகை அலங்காரம்!!  - Seithipunal
Seithipunal


ம்மில் பலர் பல வண்ணங்களில் கூந்தல் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக செயற்கை ஹேர் கலரிங் செய்து நீங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இயற்கையான முறையில் நிறங்களை எப்படி பெறலாம்?

சிவப்பு நிற கூந்தலுக்கு :

உங்கள் கூந்தலுக்கு சிவப்பு நிறம் வேண்டுமென்றால் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

சாமந்தி

ரோஜா இதழ்கள்

செம்பருத்தி

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை சிரிதளவு வைத்து நீரை கொதிக்க வையுங்கள். பின்பு உங்கள் கூந்தலுக்கு தேவையான அளவில் சாமந்தி, செம்பருத்தி மற்றும் ரோஜா ஆகிய மலர்களின் இதழ்களை நீரில் போட வேண்டும். இவை நன்கு கொதித்த பின்பு நீரின் வண்ணம் மாறும். நிறம் மாறிய பின்பு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தில் இருக்கும் நீரை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நீரில் ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொண்டு அடிக்கடி ஸ்பேரே போல பயன்படுத்தலாம். இல்லையெனில் இதை கூந்தல் முழுவதும் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, சிறிது நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். முக்கால் மணி நேரம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். இதே போல் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முடியின் நிறம் சிவப்பாக மாறிவிடும். நீண்ட நாட்களுக்கு கூந்தலில் நிறம் இருக்கும், எந்த பக்க விளைவும் ஏற்படாது.

 சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திற்கு:

காலம் காலமாக நம்மை அழகு படுத்த’ பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் முக்கியமான ஒன்று மருதாணி ஆகும். மருதாணி முடி, கை, கால் மற்றும் நகங்களுக்கு நிறத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், குளிர்ச்சியையும் தர உதவுகின்றது. இந்த மருதாணி கலவை உங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

மருதாணி பவுடர் – 10தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 5 தேக்கரண்டி

வினிகர் – 4தேக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அளவில் அல்லது உங்களுடைய கூந்தலுக்கு தேவையான அளவில் இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பௌலில் போட்டு நன்கு பசை போல குழைத்து கூந்தல் முழுவதும் தனித்தனியாக பிரித்து அப்ளை செய்ய வேண்டும். பின்பு சுமாராக 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வையுங்கள்.

பின்பு கூந்தலை அதிகம் ரசாயனம் கலக்காத மூலிகை ஷாம்ப்பூ அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசிக் கொள்ளவும். இதை இரண்டு வாரம் செய்தால் போதும் கூந்தலின் நிறம் மாறி நீண்ட நாட்களுக்கு’ மாறாமல் அப்படியே இருக்கும். உங்களுக்கு எந்த விதமான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. நீங்களும் இந்த முறைகளை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair coloring at home 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->