வீட்டில் இருக்கும் கிரைண்டரை கொஞ்சம் கவனிங்க..! - Seithipunal
Seithipunal


கிரைண்டரை அதிகமாக மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்துவோம். தானியங்களை அதிகம் சேர்க்காமல் சிறிதளவு சேர்த்து அரைப்பதால் கூட கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் கல்லின் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல வரும்.

குழவியில் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும். கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். அவை லு}சாக இருந்தால் மாவு சரியாக அரைக்காமல் இருக்கும்.

கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி தொந்தரவு இருக்கும் போது சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது. எனவே கிரைண்டரை தனியாக வைக்க வேண்டும்.

கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

மேலும், கொர கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே பேரிங்கை மாற்ற வேண்டும். மோட்டார் சுழன்று டிரம் சுழற்சி இல்லை என்றால் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க, வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவி துணியால் துடைத்து வந்தால் கிரைண்டர் புதிதாக இருக்கும்.

கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grinder maintenance tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->