பெண்கள் விரும்பும் பாவாடை தாவணி....!! - Seithipunal
Seithipunal


நமது இந்திய ஆடைகளில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தென்னிந்திய ஆடைகளை அணியும் பெண்கள் இன்றளவில் குறைந்து இருந்தாலும்., அவர்கள் திருவிழாவின் போது நமது பாரம்பரிய ஆடைகள் மாறும் பாவாடை தாவணியை அணிந்து வரும் போது அவ்வுளவு அழகாக இருப்பார்கள். நமது தாயாரின் சிறு வயதில்., பருவமடைந்த நாட்களில் இருந்து., திருமணம் முடியும் வரை பெண்கள் அணிந்த ஆடை பாவாடை தாவணிதான். 

நமது காலங்கள் மற்றும் நாகரீகம் மாற மாற மேற்கூறியது போல சுப நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகளாக பாவாடை தாவணி மாறிப்போனது. இன்றுள்ள நிலையில்., பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு பாவாடை தாவணி ஆடைகளை அணிவித்து அழைத்து வருவது நாகரீகமாக மாறிவிட்டது. பாவாடை தாவணியில் பட்டால் ஆன பாவாடை தாவணியில் பெண்கள் வந்தால் இன்னும் அழகாக இருக்கும். 

பெண்கள் பருவமடைந்த பின்னர் திருமண வயதை எட்டும் சமயத்தில் சேலை கட்டி வருவார்கள்... அன்றுள்ள பாடல் ஒன்று இங்கு நாம் நினைவு கூட தக்கது.. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?... என்ற பாடல் அருமையாக இருக்கும்.. அன்றைய பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களின் ஆடை., அலங்காரத்தை பெருமையாக கூறியே வெளிவரும்... ஆனால் இன்று???......

பாவாடையில் பல வகை பாவாடை உள்ளது. சிறிய ஜரிகை பார்டர்., கையகல ஜரிகை பார்டர்., ஒரு முழம் ஜரிகை பார்டர் பாவாடையை பொறுத்த வரையில்., தாவணியில் ஜரிக்கை கரை அளவில் மாறுபட்டு., சில வகை பட்டு பாவாடையில் ஜரிகை பார்டர் இருக்கும்.. பிற இடங்கள் ப்லைண்ணாக இருக்கும். இன்னும் சில பாவாடையில் ஜரிகை கட்டம்., புட்டாக்கள்., யானை., குதிரை போன்ற பல டிசைன்களில் இருக்கும். 

இந்த முறையில் வைர ஊசி டிசைன் உள்ள பாவாடை., பாவாடை முழுவதுமாக கொடி பூ ஜாரியுடன் பெரிய மற்றும் சிறிய பட்டார்கள்., செல்ப் டிசைன் பாவடிகள்., போச்சம்பள்ளி டிசைன் பாவாடைகள்., மென்பட்டு பாவாடை என்று இவற்றுக்கான தாவணி மற்றும் ஜெயர்ஜெட் தாவணி அணிந்தால் அலகுக்குகே அழகு போன்று இருக்கும். 

இன்றுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு மணப்பெண்கள் அணியும் டிசைனர் பாவாடை தாவணி பிரபலமாக உள்ளது. மணப்பெண்கள் அணியும் பாவாடை தாவணியானது பெரும்பாலும் பனாரஸ் பட்டு மற்றும் டிசைனர் பாவடிகளாக இருக்கும். பாவாடை., ஜாக்கெட் மற்றும் தாவணி ஒரே நிறம் அல்லது வெவ்வேறு நிறம் போன்று அணிவது அவர்களின் நிற விருப்பத்தை பொறுத்து மாறுபடும். 

தென்னிந்தியாவில் இருக்கும் பாவாடை தாவணி ஆடைகள் வடக்கில் காக்ரா சோளி, சனியா சோளி லெஹங்கா என்ற பெயருடன் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உடுத்தப்படுகிறது. பாவாடை மற்றும் ஜாக்கெட்டை பொறுத்த வரையில் அதிகளவில் எம்பராய்டரிங்., ஜர்தோஷி மற்றும் குந்தன் வேலைகள் சிறப்பாக அமைவதால்., தாவணி ஜாக்கெட் துணியில் எளிமையாக அணிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது. 

கிரேப் மற்றும் லினென் துணிகளில் பாவாடை தாவணிக்கான ஜோடிகள் வருகிறது. பெண்களால் அதிகளவு விரும்பப்படும் நெட் மற்றும் ஷீபான் ஆடைகள்., காட்டன் ஆடைகள்., வெல்வெட் ஆடைகள் மற்றும் நெட் ஆடைகள்., உப்பாடா பட்டு ஆடைகள்., ஷேடின் கிரேப் ஆடைகள், பிராசோ ஆடைகள்., ஜயார்ஜெட் ஆடைகள் விரும்பப்படுகிறது. 

இன்றுள்ள சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ரெடிமேட் பாவாடை தாவணி ஆடைகள் வருகிறது. இந்த ஆடைகள் பல டிசைன்களுடன் சேர்ந்து வருவதால்., குழந்தைகளால் அதிகளவு விருப்பப்பட்டு வருகிறது. இவைகள் தற்போது நாம் வாங்கி தைக்கும் துணிகளாகவும் கிடைக்கிறது. துணிகளை எடுத்து தைத்த பின்னர் நாம் விரும்பும் டிசைன்களை அதில் வைத்துக்கொள்ளலாம். 

இன்றைய நாகரீக உலகில் பல மாற்றத்தின் காரணமாக விதவிதமான ஆடைகளை அணிந்து வந்தாலும்., திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நமது பாரம்பரியத்தை மாற்றாமல் பாவாடை தாவணி மற்றும் சேலைகளில் உலா வரும் என் தமிழச்சியின் அழகோ அழகுதான். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls like south indian culture dress pavadai davani dress


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->