கருணை கிழங்கை வைத்து வித்யாசமான ரெசிபி..! இனி இதை செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


கருணை கிழங்கை பயன்பபடுத்தி பொரியல், குழம்பு தான் பொதுவாக செய்வோம். இப்போது கருணை கிழங்கை பயன்படுத்தி கபாப் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

கருணைக்கிழங்கு - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
பிரெட் தூள் - தேவையான அளவு
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிதளவு
புதினா - தேவையான அளவு
சோள மாவு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கருணை கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புளியை ஊறவைத்து  கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும் அதில் தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு இவற்றை நன்றாக வதக்கிவிட்டு இதில் மசித்த கருணைக்கிழங்கை போட்டு கிளறவும்.

புதினா, புளி கரைச்சல், உப்பு, சோள மாவு, பிரெட் தூள் சேர்த்து கருணைக்கிழங்குடன் மசாலாவை நன்றாக கலக்கவும் பின்னர் இந்த கலவையை குச்சியில் சொருகி வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த கபாப்பை வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான கருணை கிழங்கு கபாப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elephant Foot kabab Recipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->