திருமணத்தில் மெட்டி அணிவது எதற்காக தெரியுமா.?! மெட்டி அணிவதன் ரகசியம்.! - Seithipunal
Seithipunal


உலகத்திலேயே இந்தியப் பெண்கள் மட்டும்தான் இந்த மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கத்தில் கொண்டுள்ளனர். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு அறிவியலும் கூட.

திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப்போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது.

பெண்கள் தெருவில் செல்லும்போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு, அவனை எதிர் நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.

பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது.

பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை முக்கியமாக கர்ப்பிணி பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர். ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do yo know why wearing mattresses at a wedding


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->