இனி பேரீச்சம்பழத்தில் லட்டு செய்யலாம்., குழந்தைகள் விரும்பும் சுவையான ரெசிபி..!!
Dates Laduu Recipe Tamil
பொதுவாக பேரீச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் சுவையான லட்டு எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
பேரீச்சம்பழம் –ஒன்றரை கப்
பாதாம் - அரை கப்
முந்திரி - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கொட்டை எடுத்த பேரிச்சம் பழம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கொட்டை எடுத்த பேரிச்சம் பழம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளா வேண்டும்.
ஒரு வாணலியில், தேங்காய்த் துருவல் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் கசகசாவை வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும். நெய்யில் முந்திரி பாதாமை வறுத்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று பிடித்துக் கொள்ளவும். காற்றுபுகாத ஒரு டப்பாவில் மூடி வைத்து விட்டால் ஒரு மாதம் வரை இதனை பயனபடுத்தலாம்.