ஊரடங்கால் அதிகரித்துள்ள பெண்களின் முக்கிய பிரச்சனை..ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதிலும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மக்களின் குடும்ப வாழ்க்கைமுறையும் தொடர்ந்து பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. கரோனா வைரஸிற்கு இன்னும் மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், சமூக இடைவெளி என்ற ஒரு விஷயமே பெரும் தீர்வாக இருக்கிறது. 

உலக நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். ஊரடங்கால் உலக அளவில் பெண்கள் அதிகளவில் கர்ப்பமடைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. 

இந்த விஷயம் குறித்து துருக்கி மகளிர் நல ஆணையம் எடுத்துள்ள ஆய்வில் சுமார் 58 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களின் தாம்பத்திய செயல்பட்டு முறை அதிகரித்து இருப்பதாகவும், ஊரடங்கிற்கு முன்னர் தாம்பத்திய வாழ்க்கையில் 1.9 முறையாக இணையும் வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது 2.4 ஆக அதிகரித்துள்ளது. 

ஊரடங்கிற்கு முன்னர் கர்ப்பமாகும் ஆசை என்பது 32.7 விழுக்காடாக இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பெரும் சரிவை சந்தித்து கர்ப்பமாகும் ஆசை 5.1 ஆக குறைந்துள்ளது. இதனைப்போல பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. 

முன்னதாக சுமார் 12.1 ஆக இருந்த மாதவிடாய் கோளாறு பிரச்சனைகள் அதிர்ச்சி தரும் வகையில் 27.6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பெண்களின் தாம்பத்திய ஆசைகள் மற்றும் தாம்பத்திய செயல்பாடுகள் அதிகரித்தாலும், தாம்பத்திய வாழ்க்கைத்தரம் வெகுவாக பின்னாட்களில் சரிவை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy increased and periods problem also increased during corona amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->