அவ்வப்போது தேவை தம்பதிகளுக்குள் அழகிய தாம்பத்தியம்.! - Seithipunal
Seithipunal


ஆணாகினும் - பெண்ணாகினும் இருபாலரும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து தவறாது தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்று காம சூத்திரம் கூறுகிறது. இயற்கையின் உன்னதமான படைப்பில் ஆண் - பெண் என பாலின அடிப்படையில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு படைப்பும் பல விசித்திரங்களையும், வியக்க வைக்கும் விந்தைகளும் கொண்டுள்ளது. 

கருவில் உள்ள குழந்தையின் பிறப்பிற்கு முன்னரே பாலினம் தீர்மானம் செய்யப்பட்டு, குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி மற்றும் அறிவு, ஆற்றல் போன்றவையும் தீர்மானம் செய்யப்படுகிறது. பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி அதிகமாக அல்லது மெதுவாக அல்லது நிதானமாக இருக்க வேண்டும் என்பதை கருவியிலேயே தீர்மானித்துக்கொள்கிறது.

உடலின் இயக்கங்கள் தொடர்பான இவ்விஷயத்தில் பல நுணுக்கமான அற்புதங்களும் மறைந்துள்ளது. பருவ வயதை எட்டியதும் இருபாலரின் உடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்துப்பை வளர்ச்சி, விந்து உற்பத்தி தொடங்குகிறது. பெண்ணுக்கு கருப்பை வளர்ச்சி, கருமுட்டை உற்பத்தி போன்ற செயல்கள் நடைபெறுகிறது. சில எதிர்ப்பாராத சூழலில் இயற்கைக்கு புறம்பான செயல்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

ஆணின் விந்து உற்பத்தியாக தொடங்கியதும், அதனை வெளியேற்றாமல் அடக்கி வைத்து வந்தால், விந்து உடலுக்குள்ளேயே தேங்கி உடல் நல கோளாறுகள் ஏற்படும். உயிரியல் அறிஞர் டார்வினின் கூற்றுப்படி, எந்த உறுப்பை பயன்படுத்தாமல் வைக்கிறோமோ, அந்த உறுப்பு நாளடைவில் செயல்திறனை இழந்து சுருங்கி மறையும் என்பது தான். இருபாலரின் பாலின் உறுப்புகளுக்கும் இவை பொருந்தும். 

தாம்பத்தியம் மற்றும் கலவி தொடர்பான விஷயங்களில் இருபாலரும் தகுந்த வயது மற்றும் பருவம் எட்டிய பின்னர் தாம்பத்தியத்தில் இணைந்தால் நல்லது. பாலின உறுப்புகளை உபயோகம் செய்யாத பட்சத்தில் ஆண் அல்லது பெண்ணுக்கு உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படும். பெண்கள் அதிகளவு தாம்பத்திய விஷயத்தை தள்ளிப்போட்டு அல்லது தவிர்த்தோ வந்தால் நரம்பு கோளாறு, மனநல பாதிப்பு, அஜீரண கோளாறு, தலை நோய், தலைபாரம் போன்றவை ஏற்படும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Enjoy During Night is Good to Health 4 Sep 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->