காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காலிஃபிளவர் சூப்.! 5 நிமிடம் தான்.!  - Seithipunal
Seithipunal


காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை பயன்படுத்தி சூப்பாக செய்து குடிக்கக் கொடுக்கலாம். சூப் குடிப்பதால் பசி நன்றாக எடுக்கும். காலிஃபிளவரைப் பயன்படுத்தி வீட்டில் எளிமையாக காலிஃபிளவர் சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

காலிஃபிளவர் - 2 கப்
காலிஃபிளவர் தண்டு - 2 கப்
காய்ச்சிய பால் - 3 கப்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:

காலிஃபிளவர் சூப் செய்வதற்கு முதலில் காலிஃபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு காலிஃபிளவர் தண்டு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மைதா மாவுடன் ஒரு கப் நீரை ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி, அதனுடன் மிளகு, உப்பு சேர்த்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள காலிஃபிளவர் தண்டு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, அதனுடன் கலக்கி வைத்துள்ள மைதா மாவுக் கரைசலைச் சேர்த்து, நன்றாக சூடானதும் இறக்கி ஆற வைத்து, முன்பு வதக்கி வைத்துள்ள காலிஃபிளவர் கலவையைச் சேர்த்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். நன்கு சூடானதும், அதனுடன் மேலும் ஒரு கப் நீர் மற்றும் காய்ச்சிய பாலை சேர்த்துக் கலக்கவும். சுவையான காலிஃபிளவர் சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couli flower soup preparation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->