இனிப்பு சுவையின் ராணி.. ரொட்டி குலோப்ஜாமுன்.! செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


ரொட்டி குலோப்ஜாமுன்..

தேவையான பொருள்கள்:

ரொட்டி 4 துண்டுகள் (Slices)

நெய் ஒரு பெரிய கரண்டி

சர்க்கரை முக்கால் ஆழாக்கு

தண்ணீர் ஒரு கரண்டி

செய்முறை:

சர்க்கரையை ஒரு கரண்டி நீர் சேர்த்துப் பாகு வைத்துக் கொள்ளவும் (இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சர்க்கரைப் பாகு வைக்கும் சமயத்தில் சர்க்கரை முழுவதும் அதில் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு அவுன்ஸ் பால் விட வேண்டும். 

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு நுரைத்து அழுக்காக மேலே வரும் பகுதிகளை வடி கரண்டியால் எடுத்து விட வேண்டும். பிறகு பாகு தயாரித்து மீண்டும் ஒரு முறை சந்தேகத்திற்கு வடி கட்டிக் கொள்ளவும்) இப்போது அடுத்த கட்டமாக ரொட்டிகளைத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நெய்யைக் காய வைத்து ஒவ்வொரு ரொட்டித்து துண்டையும் அதில் தீய விடாமல் வறுத்துப் பாகில் போடவும்.
ஐந்து நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு சுவையான ரொட்டி குலோப் ஜாமூன் தயார்.

பொதுவாக இனிப்பு பண்டங்கள் உடல் எடையை கூட்டும். அதனால் மெல்லிய சரீரம் கொண்ட இளைஞர்கள் அதிகம் இனிப்பை உண்டால் உடல் எடை கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook to gulab jamun


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->