குழந்தைகளை இப்படி தான் வளர்க்க வேண்டும்..! - Seithipunal
Seithipunal


வளர்ந்து வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது என்பது பெரும் சவலாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் குழந்தைகளை எப்படி தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது என்று கட்டாயம் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

குழந்தைகளிடம் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று வாங்க பார்க்கலாம் :

குழந்தைகள் பொதுவாகவே பெரியவர்களை பார்த்து தான் வளருகிறது நாம் செய்வதையே அதுவும் செய்கிறது எனவே குழந்தைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். அவர்கள் முன்பு இழிவாக நடந்து கொள்ள கூடாது.

1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும். 

2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் குறை சொல்லாமல் ஏற்று கொள்ளுங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம். 

3. பெற்றோர்கள் வெளிப்படையாக குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும். 

4. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம். 

5. தேர்வில் மதிப்பெண் குறைந்தால் கடிந்து கொள்ளாமல் அதற்கான காரணத்தை கேட்டறிந்து அதற்கான தீர்வை வழங்க வேண்டும். மேலும் எப்பொழுதும் பாட புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிக்கச் சொல்லாமல் புராணகதைகள், பொதுஅறிவு சார்ந்த புத்தங்களை படிக்கச் சொல்லலாம். 

6. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்த குழந்தையோடு ஒப்பிட்டு பேசாமல் தங்கள் குழந்தைக்கான திறமையை ஆதரிச்சு உற்சாக படுத்த வேண்டும். 

7. பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

children should be raised like this..


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->