சுவையான செட்டிநாடு வெஜ் பிரியாணி..!     - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

சீரக சம்பா அரிசி -200கி
பீன்ஸ்,கேரட், பட்டாணி சேர்த்து-200கி
பிரட் -6 துண்டுகள்
தேங்காய் -1/2மூடி
கொத்தமல்லி-1/2கட்டு
புதினா - 1/2கட்டு
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5பல்
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்-15 
பெரிய வெங்காயம்-1 
பச்சை மிளகாய் -3 
தக்காளி -1 
முந்திரி -5 
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 1 
நெய் -தே. அளவு
உப்பு -தே. அளவு

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் ஊற வைத்து, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். 

காய்கறிகள், தக்காளி, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை போட்டு மறுபடியும் நன்றாக கிளறி விடவேண்டும். இத்துடன் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதித்தவுடன் தயிர், அரிசி இரண்டையும் சேர்த்து கிளறி, 2 விசில் வரும் வரை வேக விட வேண்டும். பின்பு குக்கரைத் திறந்து வறுத்த பிரட் துண்டுகளை தூவிப் பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chettinad veg biriyani recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->