செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு... எப்படி செய்வது?
Chettinad crab water curry How to make it
செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 20
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
பூண்டு பல் - 8
கத்தரிக்காய் - 2
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,நண்டை கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, கத்தாpக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வெங்காயம், கத்தாpக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு,காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்து பாரிமாறவும்.
English Summary
Chettinad crab water curry How to make it