அட முட்டைகோஸ்ஸில் இப்படியும் செய்யலாமா?..!! செரிமான கோளாறுகளை சரி செய்யும் சூப்பரான ரெசிபி..!! - Seithipunal
Seithipunal


செரிமான கோளாறுகளை சரிசெய்ய முட்டைகோஸ் சிறந்த உணவு. தற்போது முட்டைகோஸில் எப்படி ரொட்டி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,

காய்ச்சிய பால் - அரை கப்,
உப்பு - அரை டீஸ்பூன்.

ஸ்டஃபிங்:

முட்டைகோஸ் துருவல் - அரை கப்,
வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை - தலா கால் கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கோதுமை மாவில் பால் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுடன் காய்கறி கலந்து ரொட்டி போல் தயாரிக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும். சூப்பரான முட்டைகோஸ் ரொட்டி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabbage Recipe in Tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->