பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தவிர்க்க என்ன சாப்பிடலாம்?.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படும் நோய்யாக மார்பக புற்றுநோய்யானது இருக்கிறது. உலகளவு சுமார் 10.4 விழுக்காடு அளவிலான பெண்கள் மார்பக புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வறிக்கை கூடுகிறது. சரியான உணவு பழக்க வழக்கத்தை மேற்கொள்ளவிட்டால் இந்த பிரச்சனை ஏற்பட 20 % முதல் 30 % வரை பெண்களுக்கு மார்பக புற்றுநோயானது ஏற்படுகிறது. இந்த புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தவிர்ப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு பொருட்களை பற்றி காண்போம்.  

மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதற்காக புளுபெரீ பழத்தை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகளின் மூலமாக புற்றுநோயின் செல்களுக்கு எதிராக செயல்பட்டு., புற்றுநோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து நமது உடலினை பாதுகாக்கிறது. 

தினமும் உண்ணும் உணவில் காளான்கள் சேர்ந்தால் நல்லது. இதன் மூலமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் தாக்கமானது தவிர்க்கப்பட்டு., மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை குறைகிறது. புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிப்பதற்கு பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் மாதுளையை சாப்பிட வேண்டும். 

breast, breast cancer, breast cancer girl eating food, மார்பக புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்,

பச்சை இலை காய்கறியில் இருக்கும் வைட்டமின் பி., நார்சத்து., பைட்டோ கெமிக்கல் மற்றும் குளோரோபைல் சத்துக்களின் காரணமாக புற்றுநோயின் செல்கள் அளிக்கப்பட்டு நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது. பூண்டை சாப்பிட்டு வந்தால் பூண்டில் இருக்கும் ஆலுயத்தின் காரணமாக குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயின் செல்களை அழித்து நமது உடலை பாதுகாக்கிறது.  

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டியின் மூலமாக மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பினை சுமார் 17 விழுக்காடு அளவிற்கு குறைக்கிறது. கிரீன் டீயில் இருக்கும் பலிப்பினால் என்ற வேதிப்பொருள் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது. தினமும் சமையலில் உபயோகப்படும் பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு நிற மிளகாயை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் நமது உடலை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். 

Tamil online news Today News in Tamil 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

breast cancer girl should eat this food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->