சுவையான பிரெட் உருளைக்கிழங்கு வடை.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 10
உருளைக் கிழங்கு - 2
அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
 கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வறுத்த ரவை - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, 
கொத்தமல்லித்தழை.

urulaikizhangu bread vadai,seihitpunal

செய்முறை :

வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடி,பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பிய்த்து போட்டு நன்றாக உதிர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

இத்துடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கெட்டியாக பிசைந்து எடுத்து கொள்ளவும்.  

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவை வடையாக தட்டி போட்டோ பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bread potato preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->