தண்ணீரை எந்த நேரத்தில் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் தெரியுமா?!! - Seithipunal
Seithipunal


ண்ணீர் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். உடலில் 70% நீரால் நிரப்பப்பட்டது, எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் குடிப்பதால் பலவகையான நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். எனவே தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படி குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும் என்ற முறைகளை பற்றி இங்கு காண்போம்.

காலை :

காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். இது நம் உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட உதவுகின்றது. காலையில் தினமும் தண்ணீர் குடிப்பது நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றது. மலம் கழித்தல் பிரச்சனை ஏற்படாது.
குளிப்பதற்கு முன்:

குளிக்க போவதற்கு முன்பு பத்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. இதை தினமும் நாம் செய்து வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

உணவிற்கு முன்பு:

உணவு உண்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இதை காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளிலும் குடிப்பது அவசியமாகும்.

உணவு உண்பதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் நம் உணவு எளிதில் செரிமானம் அடையும். அதிகமாக உணவு சாப்பிட்டாலும் எடை அதிகரிக்க கூடாது என நினைப்பவர்கள் உணவு உண்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது கட்டாயம் ஆகும். இவ்வாறு இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் அதிக உணவாக இருந்தாலும் எளிதில் செரிமானம் ஆகும்.

உறங்குவதற்கு முன்:

தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். காரணம் இந்த முறை இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. மாரடைப்பு வராமல் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது

உடற்பயிற்சி செய்வதற்கு முன்:

காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் உடற்பயிற்சி செய்யும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், அதிகமாக வேலை செய்து முடித்த பின்பும் உங்களுக்கு தாகம் எடுக்கும் போது கட்டாயமாக தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை சாந்தப்படுத்தி, ஒரு வித மன அமைதியை உங்களுக்கு தரும். எனவே தினமும் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Best time for drinking water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->