ஹெல்தியான பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
துருவிய பீட்ரூட் – கால் கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – 3.

செய்முறை:

மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, கால் கப் தண்ணீர் ஊற்றி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு வடிகட்டி பிழிந்துகொள்ளவும்.

மீண்டும் தேங்காய் – பீட்ரூட் விழுதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை வடிகட்டிக்கொள்ளவும்.

இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்கு கலந்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beetroot coconut milk juice recipe in Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->